நடனத்தின் வகைகள்

பரத நாட்டியம்



பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். பரத முனிவரால் உண்டாக்கப்பட்டதனால் பரதம் என்ற பெயர் வந்ததாகக் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக்கலைஞரின் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.

இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் 'லாஸ்யா' என்று அழைக்கப்படுகிறது.


உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது 'அடவு' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது 'ஜதி' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம் ,மற்றூம் மேலக்கடம்பூர்ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன.
     
பரத  நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒரு புறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யோகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார்.

பரத நாட்டியம் பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகளும் உள்ளன. அவற்றில் சில, 'பந்தநல்லூர் பாணி', 'வழுவூர் பாணி', 'தஞ்சாவூர் பாணி', 'மைசூர் பாணி', 'காஞ்சிபுரம் பாணி' ஆகியவை ஆகும். இக்கலையின் ஆசிரியர்களில், 'வழுவூர் ராமையா பிள்ளை', 'தனஞ்சயன்', 'அடையார் லக்ஷ்மணன் ' , 'கலாநிதி நாராயணன்' ஆகியோர் குறிப்படத்தக்கவர் ஆவர்













மணிப்புரி


மணிப்புரி மாநிலத்தைச் சேர்ந்த, புகழ் பெற்ற நடனம் மணிப்புரி நடனம். அந்த மாநிலத்தில் இதை பலபேர் சேர்ந்து ஆடுவது வழக்கம். இது தாண்டவம், லாஸ்யம் ஆகிய இரு வகை ஆடல்களுக்கும் இடமளிக்கிறது. மணிப்புரி நடனத்தின் அபிநயம், உடல் முழுவதையும் அசைக்கும் ஆங்கிக அபிநயத்தின் அடிப்படையில தான் அமைந்திருக்கும். ஆகார்யமும், ஓரளவுக்கு இடம் பெற்றாலும், சாத்விக அபிநயத்திற்கோ, ஒவ்வொரு வார்த்தைக்கும் அபிநயக் கையைப் பயன்படுத்துவதற்க்கோ இதில் முற்படுவதில்லை. "லைஹரோபா" நாட்டியம், "ராசலீலா" நிருத்தம், ஆகியவை முறையாக சைவம், வைஷ்ணவம் ஆகிய சமயங்களின் அடிப்படையில் நிகழ்த்தப்படுகின்றன. பெண்கள் ஆடும் லாஸ்யம், மிக நளினமாகவும், குழைவாகவும் அமைந்திருக்கும். தாண்டவ முறையைச் சேர்ந்த "புங் சோலோம்" போன்ற நடனங்கள் உத்வேகம் நிறைந்ததாக இருக்கும். இந்த நடனத்தில், ஆண்கள் கையிலே "டோல்கி" என்ற மத்தளத்தை வாசித்தபடியே ஆடுவர். "கர்த்தால் சோலோம்" என்தில் கைகளால் பெரிய தாளங்களை தட்டிய வண்ணம் ஆடுவர். இவை இரண்டும் "சங்கீர்த்தன்" என்று சொல்லப்படும் வைணவ வழிபாட்டு முறையின் ஒரு அம்சமாக விளங்குகின்றன.

மணிப்புரியில், பொதுவாக பாதங்களை எப்போதும் சேர்த்தும் முழங்கால்
 வளைத்தும் வைக்கப்பட்டு செயல்படுவர். உடம்பின் செய்கை அலைபோல எழும்பியும், பாம்பு போன்று நெளிந்தும் இருக்கும். கைஅசைவுகளை செய்யும் பொழுது, விரைப்பாகயின்ரி இழைந்து செயல்ப்படுவர். இவர்கள் பொதுவாக எல்லா அசைவுகளிலும் ஹஸ்த காரணங்களை உபயோகிப்பர். நிருத்த ஹச்தங்களையே அதிகமாக பயன்படுத்தி, அபிநய ஹஸ்தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கமாட்டார்கள். மணிப்புரி சொற்கட்டுகள் "ங்" என் னும் சப்தத்தை அதிகம் பயன்படுத்தி, கேட்பதற்கு சீன மொழியை சற்று நினைவுபடுத்தும். டோல்கி, குழல், மஞ்சிரா(தாளம்) போன்ற வாத்தியங்கள் இதன் முக்கியமான இசைக்கருவிகளாகும். மனிப்புரியில் உபயோகிக்கப்படும் ஆடைகளும் அணிகலன்களும் அழகான வேலைப்பாடுகளுடன் அமைந்திருக்கும். கூடை போன்ற வடிவம் கொண்ட ஆடை சமீபகாலமாக உருவானதே, முதலில் இவர்கள் உபயோகித்தது லுங்கியைப் போன்ற ஆடை தான்.மணிப்புரி நடனம் மணிப்பூர் மக்களின் வாழ்க்கையோடு சமய அடிப்படையில் சங்கமமானதொரு அழகிய கலை. இதன் செய்முறையைக் கொண்டு,தனி நடனங்களையும் நிருத்திய நாடகங்களையும் கூட மணிப்புரி நடனக்காரர்கள் ஆடி வருகின்றனர்

 

 

 

 

 

 ஒடிசி



ஒடிசி என்பது இந்தியாவிலிருக்கும் ஒரிஸ்ஸா மாநிலத்தில் ஆடப் படும் ஒரு நடனம். இது கோயில்களில் பேணப்பட்டுவந்த ஒரு பாரம்பரிய நடனக் கலையாகும். பதினேழாம் நூற்றாண்டில் 'கோட்டிப்புகழ்' எனப்படும் சிறுவர்கள் இந்நடனத்தைப் பெண்ணுடை தரித்துக் கோயில்களில் ஆடினர்.
வட இந்திய கல்வெட்டுக்கள் மற்றும் சிற்ப சான்றுகளின்படி, பல நூற்றாண்டுகளாக ஒடிசி நடனம் ஆடப்பட்டு வந்திருக்கிறது. ராணி கும்பா குகைகளில் காணப்படும் சிற்பங்களின் ஒடிசி நடனமாவது, கிறிஸ்து பிறப்பதற்கு முந்தைய காலத்திலேயே ஆடப்பட்டு வந்தது என்பதற்கு சான்றாகும். சில அறிஞர்கள் ஒடிசி நடனமாவது, பரத நாட்டியத்திற்கும் முந்தயது என்று கருதுகிறார்கள்.
ஒடிசி நடனத்திற்கு இசைக்கப்படும் இசையில் கர்நாடக இசை மற்றும் ஹிந்துஸ்தானி இசை மட்டுமல்லாது ஒரிசா மாநிலத்தின் பழங்குடியினரின் இசையையும் பார்க்கலாம். பக்கவாத்தியங்கள் மத்தளம், தபலா, புல்லாங்குழல், மிருதங்கம், மஞ்சீரா, சித்தார் மற்றும் தம்பூரா ஆகியவை அடங்கும்


நடன முறை


ஒடிசி நடன நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ஜகன்னாதருக்கு செய்யும் இறை வணக்கமான 'மங்களசரண்' என்னும் நடனத்துடன் தொடங்கும். பின்னர் குரு வந்தனம் நிகழும். அடுத்தது, தாளக்கட்டிற்கு ஏற்றவாறு 'பல்லவி' நடனமும், கை முத்திரைகளும், முக பாவனைகளும் கூடிய 'அபிநயம்' நடனமும் ஆடப்படுகின்றன. 'மோக்ஷம்' என்னும் நடனம் இதன்பின் ஆடப்படுகிறது. பின்னர் விஷ்ணுவின் பத்து அவதாரங்களை விளக்கும் 'தசாவதாரம்' மற்றும் சிவபெருமானின் பெருமைகளைப் பேசும் 'பாட் நிருத்யம்' ஆகியவை ஆடப்படுகின்றன.
ஒடிசி நடனத்தின் இன்றைய வளர்சிக்குக் காரணமாக விளங்கியவர் குரு கேலு சரண் மகாபாத்ரா. உலக அளவில் இந்த நடனம் பேசப்பட இவரும், இவரது மாணவரான சஞ்சுக்தா பணிகிரஹியும் காரணமானவர்கள். மேலும் குரு பங்கஜ் சரண்தாஸ், குரு மாயாதர் ராவுட், குரு தேவ்பிரசாத் தாஸ் ஆகியோரும் ஒடிசி இன்று உலக அளவில் பேசப்படக் காரணமானவர்கள்

























கதகளி



கதகளி இது கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடன வடிவமாகும். கதகளி நடனம், கேரள மக்களின் பண்பாட்டினைத் தெளிவாக எடுத்துக் காட்டும் அற்புதமான தெய்வீகக்கலை. இது பல பாத்திரங்களைக்கொண்ட ஒரு நாட்டிய நாடகமாக ஆடப்பட்டு வருகிறது. இராமாயணம், மகாபாரதம் போன்ற சமயம் சார்ந்த பழங்கதைகள் இந்த நடனத்துக்குக் கருப்பொருளாக அமைகின்றன.
கதகளி என்ற பதத்திற்கு 'கதையை அடித்தளமாகக் கொண்ட ஆடல்' என்பது பொருள். 'ஆட்டக்கதை' என்ற மற்றோர் பெயரும் இதற்கு உண்டு. இந்த நாட்டிய நாடகம், பழைய நாடக மேடைச் சம்பிரதாயங்களிலிருந்தும், தேவதைகளை வழிபடும் ஆட்டங்களிலிருந்தும் தோன்றியதாகக் கருதப்படுகிறது. முடியேட்டு, பகவதி பாட்டு, காளியாட்டம், தூக்கு முதலான இந்த ஆடல் வகைகள், ஆரியர்களின் வருகைக்கு முற்பட்ட காலத்தே, மக்களின் வாழ்கையோடு ஒட்டித் தோன்றியதாகத் தெரிகிறது. கதகளியின் விஷேச அம்சங்களான, பேச்சு இல்லாத அபிநயம், சமயத் தொடர்பு, மந்திரவாதத் தொடர்பு, வினோத வேஷக்கட்டு, சண்டைக் காட்சிகள் எல்லாம் சம்பிரதாயமாக அக்காலத்திலிருந்தே நிலைத்திருக்கின்றன.
முகபாவமும், கையசைவுகளும் இந்த நடனத்தின் முக்கியமான அம்சங்களாகும். ஒப்பனையும், உடையலங்காரமும் இதனை ஒரு தனித்துவமான நடன வடிவமாக்குகின்றன.

 கதகளி வேசப் பொருத்தம்

தேவர்கள், அசுரர்கள் முதலான புராண சம்பந்தமான பாத்திரங்களே பெரும்பாலும் இந்நாடகங்களில் வருகின்றபடியால், பரிச்சயமான தோற்றத்தைத் தவிர்த்து, அமானுஷ்யமான கதாபாத்திரங்களாக வேஷக்கட்டு அமைகிறது. கதகளி நடிகர்கள், பச்சை, கத்தி, தாடி, கரி, மினுக்கு என ஐவகை முக வேஷத்தை ஒட்டி பிரிக்கப் படுகின்றனர்.

பச்சை வேசம்
  தேவர்கள், கிருஷ்ணன், இந்திரன் போன்ற கதாபாத்திரங்கள் பச்சை வேஷத்திற்கு உரியவராவர். இத்தகைய பாத்திரங்களுக்கு, அரிசிப் பொடியையும் சுண்ணாம்பையும் கலந்து முகத்திற் 'சுட்டி' அமைப்பார்கள். காதின் மேற்புறத்திலிருந்து தாடை எலும்பைப்பற்றி வில் போல மத்தியில் அகன்றும் நுனியில் குறுகியும் இருக்கும்படி ஒப்பனை செய்வார்கள். சுட்டியின் உட்பாகத்திலும், முகத்திலும், நெற்றியிலும் பச்சைச்சாயம் தீட்டப்படும். இதழிலே சிவப்பு, புருவத்திலே மைக்கறுப்பு, நெற்றியிலே நாமம் முதலியன இடம்பெறும். கதகளி சம்பிரதாய அஹார்ய அபிநயம் வருமாறு: கச்சை, முன்வால், பின்வால், உடுத்துக்கட்டு, உள் குப்பாயம், வெளிக்குப்பாயம், தோள்பூட்டு, தோள்வளை, கடகம், பருத்திக்காய்மணி, கிரீடம், நெற்றிச்சுட்டு, மேல்கட்டு, சாமரம், வெள்ளிநகம் போன்ற ஆடையாபரணாதிகளே கதகளியின் சம்பிரதாய ஆஹார்ய அபிநயமாகும்.

கத்தி வேசம்

மூக்கின் கீழிருந்து கண்வரை கத்தரிபோல, வெள்ளை பூசி, அதிலே ரத்தச் சிவப்புப் பூசினால் மேலே குறித்த பச்சை வேஷத்தில் மாறுதல் ஏற்பட்டு கத்தி வேஷம் ஆகிறது. நெற்றியிலே புருவங்களுக்கிடையிலும், மூக்கு நுனியிலும், வெள்ளை உருண்டைகள் ஒட்டப் பெற்று, முகத்தின் தோற்றமே மாறுபாடடைந்து இராவணன், ஹம்சன், சிசுபாலன் முதலிய அசுரர்களைக் குறிக்கின்றது. கோரப்பற்கள் பயங்கரமான இராக்ஷத தோற்றத்தை அளிக்க வல்லன.

  தாடி வேசம்

சிவப்பு, வெள்ளை, கறுப்பு நிறத் தாடிகளைத் தாங்கியிருப்பதனால் இந்த வகைக்குத் தாடி வேஷம் என்று பெயர். சிவப்புத் தாடி துச்சாதனனைப் போன்ற கொடியவர்களையும், வெள்ளைத்தாடி அனுமன், சுக்கிரீவன் போன்றவர்களையும் குறிக்கிறது.

கரி வேசம்

கறுப்பு சாயத்திலும், கறுப்பு உடையிலும் தோன்றும் சூர்ப்பனகை போன்ற பாத்திரங்களுக்கு கரி வேஷம் என்று பெயர்.

மினுக்கு வேசம்

உடம்பில் அழகிய நிறமாக இலேசாக வர்ணம் பூசி, மைக்காத் தூளைத் தெளிப்பார்கள். ரிஷிகள், பிராமணர்கள், அரக்கியர் அல்லாத மற்றப் பெண்கள் ஆகியோர்களைக் குறிக்க மினுக்கு வேஷம் அமைக்கப் பெறும். எல்லா வகைப் பாத்திரங்களும் தங்கள் கண்கள் சிவப்பாகத் தோன்றும்படி செய்து கொள்வார்கள். ஆடவர்கள் தங்கள் விரல்களில் நீண்ட வெள்ளி நகங்களைத் தரித்திருப்பார்கள். உடையிலும் அணிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை. ஆடவர்கள் பெரும்பாலோர் கீரீடம் அணிந்திருப்பர்.

கதகளி நடிப்பு முறை

பேச்சில்லாத நாடகமானபடியால் அபிநயம் நாடகத்தின் பாஷையாக அமைகிறது. 10 அல்லது 12 வயதிலும் ஆரம்பிக்கப் பெற்று, நடிகர்களுக்குக் கடுமையான பயிற்சியளிக்கப் படுகிறது. கதகளி நடக்க இருப்பதை மத்தளம் முழக்கி அறிவிப்பார்கள். இரவு சுமார் 9 அல்லது 10 மணிக்குத் தொடங்கி இரவு முழுவதும் நாடகம் நடைபெறும். மேடையையும் சபையையும் பிரித்துக் காட்டும் வகையிலே, பெரிய குத்து விளக்கு வைக்கப் பெற்று, அதன் ஒளியிலே நாடகம் நடிக்கப் பெறும். முதலில் மத்தளம், செண்டை வாசிப்பார்கள். இது அரங்குகழி எனப்படும். அதன்பின் தெய்வ வணக்கம். அப்புறம் திரை நோக்கு. இது பக்திரஸமான பாடல். பாடும்போது திரைக்குப் பின்னாலிருந்து கலாசங்களுடன் ஆடும் பாடல். சில வேளைகளில் திரையைப் பதித்து முகத்தை மட்டும் சபையோருக்குக் காட்டுவார்கள். திரை எடுத்ததும் தோடயம், புறப்பாடு போன்ற ஆடல் வகைகள், அதற்கப்புறம் மேளப்பதம். இது கதையின் அறிமுகப்பாடல். இதன் பின்னர் ஆட்டக்கதை. இறுதியில் தனாசி என்னும் மங்களம் ஆகும்.
கதகளி நடனத்தில் பாடுபவர்களும், மத்தளம் செண்டை வாசிப்பவர்களும் இருப்பார்கள். பிரதான பாடகர் பாடும் ஒவ்வொரு வரியையும் சீடர்கள் திருப்பிப் பாடுவார்கள். இவர்கள் பாடும்போது நடிகர்கள் அபிநயம் பிடிப்பார்கள். பாட்டும், நடனமும் அநேகமுறை நடைபெறும். காதற் காட்சிகளுக்கு பதிஞ்ச ஆட்டம் என்று பெயர். இது மெதுவாக ஒருமணி நேரமாவது நிகழும். கதையிலே, தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் போராட்டம் நடந்து இறுதியில் தர்மத்தின் வெற்றியையும் அதர்மத்தின் அழிவையும் கதகளி நாடகங்கள் போதிக்கின்றன. வீரம், ரெளத்திரவம் ஆகிய ரஸங்கள் கதகளியில் முக்கியத்துவம் பெறுகின்றன. அசுர பாத்திரங்கள் மேடையில் தோன்றும்போது கர்ஜனை செய்வதும் முன்னால் பிடித்திருந்த திரையைப் பிடித்திழுப்பது போன்ற ஆர்ப்பாட்டங்களும் செய்வர். இவ்வாறாக இரவு முழுவதும் நடைபெறும் கதகளி விடியும் தருணத்தில் பக்தி ரஸமான நடனத்துடன் நிறைவுபெறும்.







குச்சிப்புடி




குச்சிப்புடி இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் வளர்ந்த ஒரு நடன நாடக வடிவமாகும். இப் பெயர் ஆந்திர மாநிலத்தின் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள குச்சிலாபுரம் என்ற கிராமத்துடன் தொடர்புடையது. 17 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி தொடக்கம் இக் கிராமத்திலிருந்து பரவத்தொடங்கிய இது இன்று இந்தியாவின் ஒரு முக்கிய நடனமாகப் பிரபலமாகியுள்ளது.

வரலாறு

நெடுங்காலமாக தேவதாசிகள் இந்த நாட்டிய நாடகத்தை ஆந்திராவின் கோவில்களில் ஆடிவந்தார்கள். காலப்போக்கில் சமுதாய மாற்றத்தோடு தேவதாசி முறை இல்லாதொழியவே இடைக்காலத்தில் பிராமணர்களால் இது வளர்க்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அக்காலத்தில் இது பல பாத்திரங்களைக் கொண்ட நாட்டிய நாடகமாக, ஆண்களாலேயே ஆடப்பட்டதாகத் தெரிகிறது.

தற்காலத்தில் ஆடப்படும் குச்சிப்புடி ஆரம்பகாலத்திலிருந்ததிலும், பெருமளவு வேறுபட்டுள்ளது. இன்று இந்த நடனம் தனிநபர் ஆட்டமாகப் பெரும்பாலும் பெண்களால் ஆடப்படுகிறது. இந்த ஆட்டம் பெரும்பாலும், சமயத்தொடர்புள்ள புராணக் கதைகளையே கருப்பொருளாகக் கொண்டுள்ளன. துரித பாத அசைவுகளையும், லாவகமான உடலசைவுகளையும் அடிப்படையாகக் கொண்டது இந்த நடனம்.

நாட்டிய நாடகம் மூலம் மக்களுக்கோ, அரசுக்கு ஒரு செய்தியைத் தரும் ஊடகமாகவும் இந்த குச்சிப்புடி நடனம் செயல்பட்டிருக்கிறது. ஒரு சமயம் நரச நாயக்கர் மன்னராக இருந்தபோது, வரிச்சுமையினால் மக்கள் படும் அவதியை மன்னர் பார்வைக்கு அரசவையில் இருந்த குச்சிப்புடி கலைஞர்கள் கொண்டு சென்றார்கள். மன்னனும் நிலைமையை உணர்ந்து மக்கள் துயர் தீர்த்தானாம்.

இசைக்கருவிகள்

இந்த நாட்டிய இசையில் கருவிகளாக ஹார்மோனியம், கஞ்சீரா, புல்லாங்குழல், வீணை மற்றும் வயலின் பயன்படுத்தபடுகிறது. மேலும், வாய்ப்பாட்டு பாடுபவர் கர்நாடக சங்கீதத்தில் பாட்டுப்பாட, நட்டுவனார் ஜதி சொல்ல, குச்சிப்பிடி நடனம் அரங்கேறும்.

நடனமுறை

குச்சிப்பிடி நடனத்தின் அங்கங்கள் நிருத்தம், நிருத்யம் மற்றும் நடனம் ஆகும். நிருத்தம் தீர்மானங்களையும், ஜதிகளையும் கொண்டது. நிருத்யம் என்பது பாடல் பகுதி. நடனம் என்பது முக பாவனைகள் மற்றும் கை முத்திரைகளை அடக்கியது ஆகும். நடனத்தில் ஒரு பகுதியாக வெண்கலத் தாம்பாளத்தின் விளிம்பின்மீது நின்றுகொண்டு ஆடுவதுண்டு. இந்தப் பகுதிக்கு பெயர் 'தரங்கம்' ஆகும். சில சமயம் தண்ணீர்ப் பானையுடனும் ஆடுவதுண்டு.


 





கதக்


கதக் (இந்தி: कथक, உருது: کتھک ) வட இந்தியாவில் உருவான எட்டு இந்திய பாரம்பரிய நடன வடிவங்களில் ஒன்றாகும். இந்த நடன வடிவத்திறகான மூலங்கள், கதாக்ஸ் அல்லது கதைச்சொல்லிகள் என்றழைக்கப்படும் பழங்காலத்து வட இந்தியாவின் நாடோடிப் பாணர்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறது. கிராம மையப்பகுதிகள் மற்றும் கோவில் முற்றங்களில் நிகழ்வுகளை நடத்திய இந்த பாணர்கள், பெரும்பாலும் புராணக் கதைகள் மற்றும் வேதப்புத்தகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிக் கதைகளை விவரித்துக் கூறுவதில் நிபுணர்களாக இருந்தனர், மேலும் தங்கள் கதை எடுத்துரைத்தலை கை அசைவுகள் மற்றும் முகபாவங்களால் அலங்கரித்தனர். கதைகளுக்கு உயிரூட்டுவதற்கு, இசைக் கருவிகள் மற்றும் வாய்மொழி இசைகளுடன் புது நடையிலான கை அசைவுகளைப் பயன்படுத்தும் ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு அரங்கமாக இருந்தது. இன்றைய அதன் வடிவம் கோவில் மற்றும் சமயச் சடங்குக்குரிய நடனங்கள் மற்றும் பக்தி இயக்கத்தின் பாதிப்பையும் கொண்டிருக்கிறது. 16 ஆம் நூற்றாண்டு முதல் அது பெர்ஷிய நடனம் மற்றும் முகலாய காலத்தின் அரசவையால் இறக்குமதி செய்யப்பட்ட மத்திய ஆசிய நடனத்தின் சில குறிப்பிட்ட அம்சங்களை உள்வாங்கிக்கொண்டது.

Add caption

கதக்கிற்கு மூன்று பெரும் பள்ளிகள் அல்லது கரானாக்கள் இருக்கின்றன, அவற்றிலிருந்தே பொதுவாக இன்றைய நிகழ்த்துனர்கள் தங்கள் வழிமரபைப் பின்பற்றுகிறார்கள்: ஜெய்ப்பூர், லக்னோ மற்றும் பனாரஸ் கரானாக்கள் (இது முறையே கச்வாஹா ராஜபுத அரசர்கள், ஔதின் நவாப் மற்றும் வாரணாசியின் அரசவைகளில் உருவானவை); குறைந்த முக்கியத்துவமுடைய (மற்றும் பிந்தையது) ராய்கார் கரானாவும் கூட இருக்கிறது, இது முந்தைய எல்லா மூன்று கரானாக்களிலிருந்த நுணுக்கங்களை ஒன்றுசேர்த்தது தன்னுடையதேயான தனிச்சிறப்புடைய இசைப்பாடல்களுக்காகப் பிரபலமடைந்தது.
கதக் என்னும் பெயர் சமஸ்கிருத வார்த்தையான கதா விலிருநு உருவானது அதற்கு கதை என்று பொருள் மேலும் சமசுகிருதத்தில் கத்தாக்கா என்றால் கதை சொல்லும் ஒருவன்/ஒருத்தி அல்லது கதைக்கு சம்பந்தப்பட்டது என்று பொருள். இந்த வடிவத்தின் சரியான பெயர் कत्थक கத்தாக் , பெறப்பட்ட வடிவத்தைக் காட்டுவதற்காக இரட்டிப்பான பல்வரிசையுடன், ஆனால் அது தற்போதைய कथक கதக் என எளிமைபடுத்தப்பட்டுள்ளது. கதா கஹெ சோ கதக் என்பது ஒரு சொல்லடை இதை ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பார்கள், இது பொதுவாக 'கதை சொல்லும் ஒருத்தி/ஒருவன், ஒரு கதக்' என்று மொழிபெயர்க்கப்படுகிறது, ஆனால் இது 'எது கதைசொல்கிறதோ, அது கதக்' என்றும் மொழிபெயர்க்கப்படலாம்.

 
கதக்கின் இன்றைய நிலவரம்

ஆங்கிலேயர் ஆட்சியின் போது வீழிச்சியிலிருந்து இன்று கதக் தன்னுடைய பிரபலத்தை மீண்டும் பெற்றுள்ளது, (அப்போது விக்டோரிய நிர்வாகத்தால் அது கீழ்த்தரமானதாகப் பார்க்கப்பட்டது), இப்போது இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்தியாவின் பாரம்பரியமிக்க எட்டு நடன வடிவங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது. கதக்கின் தற்போதைய வடிவம் கடந்த காலங்களில் அது பெற்ற அனைத்து உள்ளீடுகளின் ஒரு கலவையாக இருக்கிறது: அரசவை மற்றும் காதல் அம்சங்கள் கோவில் மற்றும் புராண/மதங்களுடன் இணையாய் அமர்ந்திருக்கிறது. மஹராஜ் குடும்ப நடனக் கலைஞர்கள் (அச்சன் மஹராஜ், ஷம்பு மஹராஜ், லச்சு மஹராஜ் மற்றும் இன்றும் உயிருடன் இருக்கும் தற்போதைய பெரும் நடனக் கலைஞரான பிர்ஜு மஹாராஜ்) மற்றும் சாஸ்வதி சென் உட்பட அவருடைய மாணவர்களின் பணி கதக்கின் பிரபலத்தன்மையைப் பரப்புவதில் வெற்றிகரமாக இருந்திருக்கிறது. அச்சன் மஹராஜ் அவர்களின் மற்றொரு சிஷ்யை சித்தாரா தேவி, இவர் பனாரசின் சுக்தேவ் மஹாராஜின் மகள். அவருடைய உயிர்த்துடிப்புடன்கூடிய, உற்சாகமிக்க சுடர்ஒளிமிக்க நிகழ்ச்சிகள் பல பார்வையாளர்களின் மனதைக் கவர்ந்திருக்கிறது. ஷம்பு மஹராஜ், திருமதி. குமுதினி லக்கியாவுக்கும் கூட பயிற்சியளித்துள்ளார், இவர் பிர்ஜு மஹராஜ்
உடன் இணைந்து, கதக்கில் பல நபர் நடனமியற்றல் புதுமையை அறிமுகப்படுத்தியுள்ளார், பாரம்பரிய முறைப்படி கதக் ஒருவரே செய்யும் நடன வடிவில் இருந்தது. அவர் சுத்தமான இலக்கியத்தரம்வாய்ந்த அசைவுகள் மற்றும் பாணியைத் தெளிவான சமகாலத்திய இடைவெளியைப் பயன்படுத்துதலுடன் இணைத்ததற்கான பெரும் பெயரைப் பெற்றுள்ளார்.

உடைகள்

  எளிமையான ஒன்றாக இருக்கலாம் அல்லது பரந்த விரிவடைதலை உள்ளடக்குவதற்கு அது நடனத்திற்கு ஏற்ப இருக்கலாம், ஆனால் அது வழக்கமாக முழங்கால் நீளத்துக்கு இருக்கும். ஆண்கள் ஒரு அங்கார்கா வையும் கூட அணியலாம் (மேலே பெண் உடைகள், பார்க்கவும்). குறிப்பாக பழைய வகை உடைகளில் சிகரம் வைத்த தொப்பிகளும் கூட உள்ளடங்கும்.
வெவ்வேறு சமுதாயச் சூழல்களைப் பிரதிபலிக்கும் வகையில் அந்த நடன பாணியே மாறிய நிலையில், நடனக் கலைஞர்களின் உடைகளும் நிகழ்த்துவதற்கான உடைகளும் மாறியிருக்கின்றன.

பெண் உடைகள்


பாரம்பரியமிக்க (குறிப்பாக இந்து) உடைகள் சிலநேரங்களில் புடவையைக் கொண்டிருக்கும், அது தினசரி பாணியில் அணிந்திருக்கலாம் அல்லது நடனமிடும்போது நகர்வுகள் தடைபடாமல் இருக்க மேலே எடுத்து செருகப்பட்டிருக்கலாம். எனினும் மிகப் பொதுவான உடையாக இருப்பது, லெஹெங்கா-சோளி இணை, இதில் விருப்பத் தேர்வாக ஒத்னி அல்லது முக்காடு இருக்கும். லெஹெங்கா என்பது தளர்ந்து கணுக்கால் நீள பாவாடை மற்றும் சோளி என்பது இறுக்கமாகப் பொருந்தும் இரவிக்கை, பொதுவாக குட்டைக் கையுடன் இருக்கும். இரண்டுமே அதிகமான அலங்காரமாக எம்ப்ராய்ட்ரி செய்யப்பட்டிருக்கலாம் அல்லது அழகுப்படுத்தப்பட்டிருக்கலாம். லெஹெங்கா சிலநேரங்களில் ஒரு விசேஷ நடன வகைக்காக மாற்றியமைக்கப்படுகிறது, அது நீண்ட காக்ராவை ஒத்திருக்கும், அப்போதுதான் சுழலும்போது அந்தப் பாவாடை பரப்பரப்புடன் விரிவடையும்.
பெண்களுக்கான முகலிய உடைகளில் மேற்புற உடலில் இருப்பது அங்கார்கா (சமஸ்கிருதம் அங்க-ரக்ஷகா 'கைகால் பாதுகாவலர்' என்பதிலிருந்து வந்தது). இந்த வடிவமைப்பு சுடிதார் கமீஸ் போன்றே இருக்கும், ஆனால் இடுப்புக்கு மேலே அது இறுக்கமாக பொருந்தியிருக்கும், மேலும் 'பாவாடை' பகுதி வெளிப்படையாக வட்டமாக வெட்டப்பட்டிருக்கும், இது சுழலும்போது கீழ்ப் பாதியை விரிவடையச் செய்யும். அதற்குக் கீழே, கால்கள் சுடிதார் மூலம் மூடப்பட்டிருக்கும் அல்லது துணி வளையங்கள் போல் தோன்றும் உடலை இறுக்கியிருக்கும் முழங்காற் சட்டை. கட்டாயமற்ற துணை உடைகளாக இருப்பது குவிந்த சிறு தொப்பி மற்றும் பண்டி அல்லது மார்பு கச்சையை உயர்த்துவதற்கு ஒரு சிறு இடுப்பளவு கையில்லாத சட்டை. இடுப்பில் ஜரி அல்லது விலையுயர்ந்த கற்களால் செய்யப்பட்ட ஒரு இடுப்புவார் கூட அணியப்படுகிறது.

ஆண் உடைகள்


ஆண்களுக்கான பாரம்பரிய உடை திறந்த மார்புடன் இருத்தல். இடுப்புக்கு கீழே வேட்டி, வழக்கமாக இது வங்காள பாணியில் இருக்கும், அதாவது பல மடிப்புவரைகளுடன் இருக்கும் மற்றும் ஒரு முனை விசிறி போன்று இருக்கும் (நடனக் கலைஞர்கள் ஆடையை இன்னும் எளிமையாக கட்டவேண்டுமா என்பது தெரியவில்லை). ஆண்களின் பண்டி யை அணியும் தெரிவும் கூட இருக்கிறது.